கோயமுத்தூர், கோவை மெடிக்கல் சேர்மன் மதிப்புக்கு டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி அண்ணன் அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டு தொடர்பான கலந்தாய்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது. (04.08.2026) பல்வேறு செய்திகளை மிகவும் நுணுக்கமாக கேட்டு அறிந்து கொண்டு, “திருக்குறள் கல்வெட்டுகள் உருவாக நிச்சயம் நான் துணை நிற்பேன்” என்று உறுதி அளித்தார். அண்ணாரை வாழ்த்தி, வணங்கியது குறள் மலைச்சங்கம். நமது வெளியீடான, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் வெளியிடப்பட்ட, “கல்வெட்டில் திருக்குறள்” என்ற புத்தகமும், ஈரோடு நந்தா கல்லூரியின் ஏ ஓ முனைவர் சீனிவாசன் அவர்கள் எழுதிய “திருக்குறளும் செயற்கை நுண்ணறிவும்” என்ற புத்தகமும் அண்ணாருக்கு வழங்கி, வணங்கினோம்
A productive consultation regarding Thirukkural stone inscriptions was held on. (04.08.2026) with the esteemed Chairman of Kovai Medical, Dr. Nalla G. Palaniswami. After listening to the details with keen interest, he assured us of his full support for the creation of Thirukkural stone inscriptions. The Kural Malai Sangam extends its greetings and respects to him. We also presented him with our publication, * Kalvettil Thirukkural *, and the book *Thirukkural and Artificial Intelligence*, authored by Dr. Srinivasan (Administrative Officer, Nandha College, Erode).
