ஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்

திருக்குறள் உலக நூலாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும்
தொடர் மாநாடுகளில் முதல் மாநாடு நாகர்கோவிலில் இரண்டாவது மாநாடு இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து மொரீஷியஸ் நாட்டிலும் தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து 24 9 2019 அன்று தலைநகர் டெல்லியில் உள்ள யுனஸ்கோ அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இறுதியாக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் நாள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள யுனஸ்கோவின் தலைமையகத்தில் நமது திருக்குறள் உலக நூலாக அங்கீகாரம் பெற இருக்கிறது.
இந்த திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பயணத்திலும் குறள் மலை பயணத்திலும்
யுனஸ்கோவின் மேனாள் இயக்குனரோடு கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வெற்றி பெற இருக்கிறோம்.
31.07.2019 அன்று ஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய  மாநாட்டில் நாம் கலந்து கொண்ட படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
நன்றி : டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன்
அன்பு அண்ணன் அன்பு ஜெயா அவர்கள்