உலகத் திருக்குறள் மாநாடு 2022 இடம் : ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

கோவையில் கொடிசியா மைதானம், பாரதியார் பல்கலைக்கழகம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகம், சரவணம்பட்டி மஹால் போன்ற இடங்களைத் தேர்வு செய்த மாநாட்டுக் குழு, இறுதியாக ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியை உறுதி செய்துள்ளது. மாநாட்டுப் பார்வையாளர்கள் சுமார் 5,000 பேர் என்பதால், 5000 பேர் அமரக்கூடிய  ஏசி அரங்கம் இந்தக் கல்லுரியில் மட்டுமே அமைந்துள்ளது. விரைவில் மாநாட்டுக்கான தேதிகளும் குறிக்கப்பட்டு விடும்.