
அன்புடையீர் வணக்கம்! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திருக்குறள் போட்டி இதோ… பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) சந்திரகாந்தம் தமிழ் மன்றம் மற்றும் குறள்மலைச் சங்கம் இணைந்து நடத்தும் திருக்குறள் ரீல்ஸ் ( Reels ) போட்டி..
“படத்தை எடு பரிசை வெல்லு ”
போட்டிக்கான விதிமுறைகள் :
1.திருக்குறளில் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு குறள் அல்லது பல குறள்கள் குறித்து ஒரு ரீல்ஸ் உருவாக்க வேண்டும்..
2.சமூக நற்கருத்தை கூறுவதாக காணொளி இருக்க வேண்டும்.
3.திருக்குறளின் பெருமையினை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விதமாக உருவாக்க வேண்டும். இதில், திருக்குறளின் மாண்பிற்கு எந்தவித குறைவும் இருத்தல் கூடாது.
4.தங்களுடைய ரீல்சை 07.03.2026 அன்று இரவுக்குள் anbarasim@psgrkcw.ac .in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
5.போட்டியில் தனி நபர்கள் மட்டுமே பங்குபெற வேண்டும். குழுவிற்கு அனுமதி இல்லை.
6.போட்டிக்கான முடிவுகள் 09.03.2026 அன்று நடைபெற உள்ள நிகழ்வின்போது அறிவிக்கப்படும்.
7.சிறந்த படைப்புகள் சிறப்பு அழைப்பாளர்கள் முன் திரையிடப்படும்.
தொடர்புக்கு
முனைவர் கோ. சுகன்யா தமிழ்த்துறைத் தலைவர் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி
முனைவர் மு. அன்பரசி
ஒருங்கிணைப்பாளர் சந்திரகாந்தம் தமிழ்மன்றம். 8489278816
செல்வி நந்தினி 9361195543
செல்வி பிரியதர்ஷினி 9787123863
இணை ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரகாந்தம் தமிழ்மன்றம்
