04.02.2026 அன்று ஈரோடு சூரியா பொறியியல் கல்லூரியும், சென்னை குறள் மலை சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் முப்பெரும் விழா சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஈ.பாலகுருசாமி அவர்கள், சூரியா பொறியியல் கல்லூரி செயலாளர் திரு கலைசெல்வன் அவர்கள் , சூரியா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன் அவர்கள், இந்திய குடியரசுத் துணைத் தலைவரின் சகோதரர் திரு சி.பி.குமரேசன் அவர்கள், TAF IAS அகாடமியின் நிறுவனர் திரு ஆகாஷ் அவர்கள், குறள் மலைச் சங்கத்தின் தலைவர் திரு பா.இரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் ஈ.பாலகுருசாமி அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
கல்வியாளர் திரு ஆண்டவர் ராமசாமி அவர்களுக்கு ”கல்வி வேந்தர் விருது” வழங்கப்பட்டது.
தொடர்ந்து சி.பி.குமரேசன் அவர்களுக்கும் திரு ஆகாஷ் அவர்களுக்கும் ”குறள்மலைச் செம்மல் விருது” வழங்கப்பட்டது.
“திருக்குறள் வாழ்வியல் தத்துவம்” என்ற நூலை பேராசிரியர் ஈ.பாலகுருசாமி அவர்கள் வெளியிட்டார்.
மேலும், பல்வேறு திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலை சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


