13.12.2023 அன்று குறள் மலைச் சங்கம், லயோலா கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது., On 13.12.2023 Kural Malai Sangam has entered into an MoU with Loyola College Mettala

1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்குவது.

2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும்.

3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 196 நாடுகளிலும் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க ஆவன செய்ய வேண்டும்., ஐக்கிய நாடுகள் சபை சட்டத்திருத்தத்தில், திருக்குறளின் முக்கிய கருத்துக்கள் இடம் பெறச் செய்யும் நிலை உருவாக்குவது, போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நோக்கங்களுடன், குறள் மலைச் சங்கம் பயணித்து வருவது கல்வியாளர்கள் அனைவரும் அறிந்த செய்தியே.

உலகத்துக்கே கல்வி நூலாகத் திகழும் திருக்குறளை, மாணாக்கர்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்த்து, அவர்கள் வாழ்க்கைக் கல்வியில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று,உயர்ந்த மனித சமுதாயத்தை உருவாகவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, 13.12.2023 அன்று குறள் மலைச் சங்கம், லயோலா கல்லூரியோடு திருக்குறள் கல்வி பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொண்டது.

கல்லூரி செயலாளர் டாக்டர் ஆல்பர்ட் வில்லியம், முதல்வர் சாமுவேல் ஜெயசீலன், தமிழ் துறை தலைவர் ஆகியோர் உடன் இருந்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் லதா, டாக்டர் மஞ்சுளா, டாக்டர் சங்கரராமன் ஆகியோருக்கு நன்றி.

  1. Inscribing Thirukkural on the Mountain and create “Thirukkural Malai” and declared this place as a International tourist destination.
  2. The Thirukkural, which is written in a way that is applicable to the world and the three eras, should be recognized by UNESCO as the World book.
  3. As Thirukkural is an educational book, efforts should be made to place Thirukkural in the curriculum in all 196 countries that are members of the United Nations. In the United Nations amendment, the important ideas of Thirukkural should be placed.

It is well-known to all educationists that the Kural Malai Sangam is traveling with such historical objectives.

On 13.12.2023 Kural Malai Sangam has entered into an MoU with Loyola College Mettala for the lofty purpose of imparting Thirukkural to the world, to the students in a proper manner, so that they can master life education in the best way and create a great human society.

Our sincere thanks to College Secretary Dr. Albert William, Principal Samuel Jeyaseelan, Head of Tamil Department. Thanks to coordinators Dr. Latha, Dr. Manjula, Dr. Sankararaman.