23.11.2023 அன்று கே.எஸ்.ஆர் கல்லூரியின் தாளாளர் திரு ஆர்.சீனிவாசன் அவர்களுடன் கலந்தாய்வு சிறப்பான முறையில் நடந்தேறியது., On 23.11.2023 Discussions was held in an excellent manner with Thiru. R.Srinivasan, Chairman of Tiruchengode K.S.R Educational Institutions.

பாரத தேசத்தின் கலாச்சாரத்தை மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக திருக்குறளின் பெருமைகளை மாணாக்கர்கள் மத்தியில் நிலைநாட்டி, மாண்புமிக்க மனிதர்களாக அவர்களை உருவாக்க, நாம் எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 23.11.23 அன்று திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியின் தாளாளர் திரு ஆர்.சீனிவாசன் அவர்களுடன் கலந்தாய்வு சிறப்பான முறையில் நடந்தேறியது.

தாளாளரின் சிந்தனைகளும் நோக்கமும் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. திருக்குறள் மூலம் உலகெங்கும் அன்பும் அமைதியும் நிலவ வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை தொடர்ந்து குறள் மலைச் சங்கம் எடுக்க வேண்டும் என்றும், இதுவரை குறள் மலைச் சங்கம் எடுத்து வரும் முயற்சிகள் மிகவும் போற்றத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். தங்கள் கல்லூரி மாணாக்கர்களையும், குறள் மலைச் சங்கத்தில் உறுப்பினராக்கி, அவர்களுக்கும் சிறந்த வாய்ப்புகளை வழங்குமாறும், அவர் நம்மிடம் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு, ஏற்பாடு தொடர்பான ஆய்வு செய்யப்பட்டது.

கே.எஸ்.ஆர் கல்லூரியின் சி.இ.ஓ டாக்டர் அகிலா முத்துராமலிங்கம், கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.வெங்கடேசன், கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி.

As part of our efforts to restore the traditions of the culture of India by inculcating the pride of Thirukkural among the students and making them honorable humans, on 23.11.23 Thirukkural Discussions was held in an excellent manner with Thiru.R.Srinivasan, Chairman of Tiruchengode K.S.R Educational Institutions .

The Chairman thoughts and intentions were very high. He mentioned that love and peace should prevail all over the world through Thirukkural, and Kural Malai Sangam should continue to take efforts for that, and the efforts taken by Kural Malai Sangam so far are very admirable. He urged us to make their college students members of the Kural Malai Sangam and give them better opportunities. Subsequently, a discussion was held regarding the consultation and arrangement for the placement of Thiruvalluvar statue.

We Thank Dr. Akila Muthuramalingam, CEO of K.S.R Educational Institutions, Dr. M.Venkatesan Principal of K.S.R College of Engineering, Dr. V.Radhakrishnan Principal of K.S.R College of Arts and Science.