ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் உலகத் திருக்குறள் மாநாடு 2022

உலகத் திருக்குறள் மாநாடு 2022 கோவையில் இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. சுமார் 5000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் அற்புதமான ஏசி அரங்கம் ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் அமையப்பெற்றுள்ளது.
இந்தக் கல்லூரி வளாகத்தில் 500 கார்கள் வரை பார்க்கிங் செய்யும் வசதியும் உள்ளது. முக்கிய விஐபிக்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் எலிபேட் வசதியும் இங்கு அமைந்துள்ளது. ஆகவே கோவை மாநகரில் இந்த இடமே உலகத் திருக்குறள் மாநாடு 2022 நடத்துவதற்கு ஏற்ற இடம் என்று ஆலோசனைக் குழுவினரால் தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் E.பாலகுருசாமி அவர்கள் தலைமையில் ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரித் தாளாளர் ஸ்ரீமதி மலர்விழி அவர்களைத் தொடர்புகொண்டு, இந்த மாநாட்டில் நோக்கத்தையும், மாநாடு பற்றிய செய்திகளையும் விவரித்து, மாநாட்டை இந்தக் கல்லூரியில் நடத்துவதற்கு ஒப்புதல் பெற்றுள்ளார்கள். இதைத்தொடர்ந்து மாநாட்டு முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
04.10.2021 அன்று ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பேபி ஷகிலா அவர்களுடன், மாநாடு நடைபெறும் மாநாட்டு அரங்கம், செமினார் அரங்கம் ஆகியவற்றை ஆய்வு செய்து, கல்லூரியில் கலந்தாய்வு நடத்தியபோது எடுத்த படங்கள்.