வணக்கம்.
2020 ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் அனைத்துலக திருக்குறள் மாநாடு
ஈரோட்டில் நடத்த இருக்கிறோம்.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களும்
யுனெஸ்கோ இயக்குனர்களும் 11 நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்கள் 2000 பார்வையாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டின் நோக்கம் திருக்குறளை கல்வெட்டில் பதித்து “குறள் மலை”
உருவாக்கப்பட வேண்டும் மற்றும் “திருக்குறள் உலக நூல் அங்கீகாரம்
பெறவேண்டும்” என்பதே.
மாநாட்டுப் பேருந்துகள் ( AC ) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்தும்
கன்னியாகுமரியில் இருந்தும் புறப்படுகின்றன.
2020 ஜனவரி இரண்டாம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் வள்ளுவர் கோட்டத்தில்
இருந்து புறப்படும் பேருந்துகள் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை வந்து
சேரும்.
வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணிக்கு புறப்படும் பேருந்து 8 மணி அளவில்
ஈரோட்டைச் சென்றடையும். ஈரோட்டில் இரவு உணவு முடித்து ஓய்வெடுத்தல், அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநாடு.
மாநாடு முடிந்து 5 1 2019 ஞாயிறு அன்று குறள் மலை சுற்றுலா.
குறள் மலை,சிவன் மலை, சென்னிமலை, பவானி முக்கூடல் ( மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் )
ஆகிய இடங்கள் பார்த்துவிட்டு, அன்றைய தினம் இரவு சென்னை வந்து சேர்தல்.