வணக்கம்.
தமிழ்நாடெங்கும் உள்ள பல தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் உயரிய நோக்கோடு, கரூர் வள்ளுவர் கல்லூரியில் தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பாளர்களின் கூட்டம் 29.05 2016 ஞாயிறு அன்று நடைபேற்றது.
இதில் தமிழ்நாடு தமிழ்ச்சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும், திருக்குறளை கட்டாயப் பாடமாக்கவேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவை விரைந்து செயல்படுத்த் அரசை வலியுறுத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பல சான்றோர் பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்டனர். தமிழை உயர்த்தும் உயர்ந்த நோக்கில்,இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
நன்றி. வணக்கம்.
அன்புடன்
பா.இரவிக்குமார்
நிறுவனர், குறள் மலைச் சங்கம்
சென்னை.
9380277177
9382677177
9543977077