Kuralmalai First International Thirukkural Conference Erode 2020

குறள்மலை முதலாவது அனைத்துலக திருக்குறள் மாநாடு ஈரோடு  2020

03.01.2020 முதல் 04.01.2020 வரை ஈரோட்டில் நடைபெற்ற அனைத்துலக
திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்த அனைவருக்கும்
மனமார்ந்த நன்றி.

அழைப்பிதழில் அச்சிட வண்ணம், பல்கலைகழகத் துணைவேந்தர்கள்,  11 நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்கள், கல்லூரித் தாளாளர்கள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழகத் துறைத் தலைவர்கள், கல்லூரித் துறைத் தலைவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், 2000 மாணாக்கர்கள், தமிழறிஞர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்தார்கள். மாநாட்டில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தீர்மானங்கள்:

*1. 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும்.*

*2. மலையிலே கல்வெட்டில் பதிக்கப்படும் திருக்குறளை உலக நூலாக  யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும்.*

*3. உலக நூலாக அறிவிக்கப்பட இருக்கும் திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பாடத்திட்டமாக திருக்குறளை சேர்க்க ஆவண  செய்யவேண்டும்.*

Resolutions as follows:

1.  Recommend the inscription of the 1330 Thirukkural Couplets on a Mountain and thereby Create Thirukkural Malai.

2.  Recommend to UNESCO to consider the recognition of Thirukkural as a World Book of Literature.

3.   Invite State Members of UNESCO to consider the translation of Thirukkural into their national languages  and promote the universal teachings of Thirukkural in the educational  institutions in their respective countries.

முப்பெரும் அருளாளர்களால் அருளப்பட்ட திருக்குறள் மாநாடு 2020
1. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதானம் தலைமை குருக்கள் ஸ்தனீகம் நடராஜ சாஸ்திரி அவர்கள்
2. கோவை சரவணம்பட்டி சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்
3. கோவை பேரூர் ஆதீனம் தவத்திரு சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்

முதல் நாள் கல்வியாளர்கள் மாநாடு இரண்டாம் நாள் சிந்தனையாளர்கள் மாநாடு மூன்றாம் நாள் குறள் மலை நேரலை மாநாடு. மூன்று நாள் மாநாட்டில் மூன்று பெரும் கோரிக்கைகள், தீர்மானங்களாக்கப்பட்டு, மேற்காணும் குருமார்கள் ஆசிர்வாதத்துடன், யுனஸ்கோ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.