மலையில் எழுதப்பட்ட முதல் இலக்கியம் திருக்குறள் என்பதனாலும், உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஆனது இந்த திருக்குறள் என்பதாலும், “திருக்குறள் உலக அங்கீகாரம் பெற வேண்டும்” என்பதற்காக ஈரோட்டில் 03.01.2020 நடைபெற்ற குறள் மலை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானத்தை முன்மொழிந்து வெளியிட்டவர் அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தரும் யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் மெம்பருமான பேரா. E.பாலகுருசாமி அவர்கள். வழிமொழிந்தவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர்.காளிராஜ், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர்.கொழந்தசாமி மற்றும் தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர்.சி.சுப்பிரமணியம்.
தீர்மானத்தைப் பெற்றுக்கொண்டு, யுனெஸ்கோவில் சமர்ப்பித்திருப்பவர், யுனெஸ்கோ மேனாள் இயக்குனர் மற்றும் மொரீஷியஸ் நாட்டின் கல்வி அமைச்சர், மொரிசியஸ் நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள். 

