05.10.2023 வள்ளலார் பிறந்தநாளில், வள்ளலார் 200 ஆண்டு விழா நிறைவு கொண்டாட்டங்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

05.10.2023 வள்ளலார் பிறந்தநாளில், வள்ளலார் 200 ஆண்டு விழா நிறைவு கொண்டாட்டங்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நான்காயிரம் அகல் விளக்குகள் ஏற்றி பெருமானை வழிபட்ட சன்மார்க்கத்தினரோடு நாமும் இருந்து பெருமான் நல்லருளைப் பெற்றோம். விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கல்லூரியின் தமிழ் துறை தலைவர் மஞ்சுளா அவர்களுக்கும் சங்கர ராம பாரதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வள்ளல் பெருமான் பிறந்த இந்த நன்னாளில், வள்ளலார் 200 சிறப்பாக கொண்டாடி வரும் இந்த நன்னாளில், கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.