உலகத் திருக்குறள் மாநாடு 2022 அறிவிப்பு மடல்

அன்புடையீர்! வணக்கம்.

        திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து, “திருக்குறள் மாமலை” உருவாக்க வேண்டும்., யுனெஸ்கோ நிறுவனம் திருக்குறளை உலக நூலாக அங்கீகாரம் செய்ய வேண்டும்., ஐக்கிய நாடுகள் சபையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது, திருக்குறளின் முக்கிய கருத்துகள் அதில் இடம் பெறச் செய்ய வேண்டும் போன்ற இலக்குகளோடு செயல்பட்டு வரும் நமது குறள் மலைச் சங்கம், தற்போது 2022 ஜனவரியில் உலகத்தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொள்ளும், “உலகத் திருக்குறள் மாநாட்டை கோவையில் இரண்டு நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளது.

        இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் அயல்நாட்டு அறிஞர்கள், உள்நாட்டு அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள் மாணாக்கர்கள் முன்கூட்டியே தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவுக்கட்டணம் உள்நாட்டினர் ரூ.10,000/  வெளிநாட்டினர் ரூ.25000/ (உணவு தங்குமிடம் உட்பட 48 மணி நேரத்துக்கு மட்டும்)

        கட்டுரைகள் எழுதி ஆய்வு நூலுக்குச் சிறப்பு சேர்க்கும் அறிஞர் பெருமக்கள் கீழ்க்காணும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுகிறோம்.

        A4 ல் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகளும், கவிதைகள் 25 வரிகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். லதா பாண்டில் ( latha font ) தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும். மாணாக்கர்களுக்கு கட்டுரைக் கட்டணம், கவிதைக் கட்டணம் ரூபாய் 500 மட்டுமே, மற்றவர்களுக்கு ரூபாய் 2000. பின்வரும் தலைப்புகளில் மட்டும் கட்டுரைகள் இருக்க வேண்டும்.

கட்டுரை, கவிதைகள் தலைப்பு

வள்ளுவத்தில் மேன்மை

வள்ளுவத்தில் கல்வி

வள்ளுவத்தில் பெண்மை

வள்ளுவத்தில் ஆன்மீகம்

வள்ளுவத்தில் பகுத்தறிவு

வள்ளுவத்தில் வான்மழை

வள்ளுவத்தில் ஆளுமை

வள்ளுவத்தில் நட்பு

வள்ளுவத்தில் காதல்

வள்ளுவத்தில் கள்ளுண்ணாமை

வள்ளுவத்தில் சைவம்

வள்ளுவத்தில் குடியுரிமை

வள்ளுவத்தில் விவசாயம் 

திருக்குறளும் திருக்குர்ஆனும்

திருக்குறளும் பைபிளும்

திருக்குறளும் பௌத்தமும்

திருக்குறளும் சமணமும்

திருக்குறளும் கீதையும்

திருக்குறளும் அரசாட்சியும்

   கட்டுரைக்கான கட்டணத்தை டிடியாகவோ, காசோலையாகவோ அனுப்பலாம். போன்பே, கூகுள்பே வசதி இருப்பவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் 9543977077.

        இரண்டு நாள் மாநாடு, மூன்று நாள் சுற்றுலா என மொத்தம் ஐந்து நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

        ஈஷா, மருதமலை, சிறுவானி அணை, பில்லூர் அணை, குந்தா அணை, வனபத்ரகாளியம்மன் ஆலயம் மேட்டுப்பாளையம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, அருவங்காடு மருந்துத் தொழிற்சாலை, வெலிங்டன், ஊட்டி, திருக்குறள் மாமலை, சிவன்மலை, சென்னிமலை, பச்சைமலை, பவளமலை, பவானி கூடுதுறை போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு சொகுசுப் பேருந்து மூலமாக அனைவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான கட்டணம் ரூபாய் 25 ஆயிரம்.

        முக்கிய சிறப்பு விருந்தினர்களின் வருகைக்காக காத்திருப்பதால், கோவையில் இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்

        சிறந்த கட்டுரையாளர்களுக்கு மாநாட்டு மேடையில் விருதுகள் வழங்கப்படும்.

        வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த திருக்குறள் மாமலைப்  பயணத்தில், கல்வியாளர்கள், அரசியல் அறிஞர்கள், பேராசிரியப் பெருமக்கள், மாணாக்கர்கள், செல்வந்தர்கள் என அனைவருமே பங்கேற்று தத்தம் நிலைகளுக்கு ஏற்ப ஆதரவளித்தும், உடன் பயணித்தும், சிறப்பு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

        இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும். இந்த மாநாடு மத்திய மாநில அரசுகளின் 100 சதவீத, கொரோனா  கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும். ஆகவே தகுதி உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளவும்.