சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

நமது குறள் மலைச் சங்கத்தின் தொடர் முயற்சிகளால், “100 திருக்குறள் தெரிந்தால் மூன்று ஆண்டு பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணம் இலவசம்” என்ற நல்ல நோக்கத்தில், தற்போது கீழ்காணும் மூன்று கல்லூரிகள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள். +2 முடித்த மாணாக்கர்கள், திருக்குறள் தெரிந்தவர்கள், கீழ்காணும் கல்லூரிகளை அணுகி சேர்ந்து கொள்ளலாம். இந்த ஆண்டு சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருக்குறள் தெரியாதவர்களும் வரும் நாட்களில் திருக்குறள் கற்றுக் கொண்டு, அடுத்த ஆண்டு சேர்க்கைக்கு தயாராகலாம். இதுபோன்று ”திருக்குறள் தெரிந்தால் கல்விக் கட்டணம் இலவசம்” என்று அறிவிக்கும் இந்த கல்லூரிகளின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் 300ஐ தாண்டும் என்று நம்புகிறோம். ஆகவே பிளஸ்-2 மாணாக்கர்கள் தங்கள் பாடத்திட்டத்துடன் சேர்த்து, திருக்குறளையும் நன்கு கற்றுத் தேர்ந்தால், உங்களுக்கு மூன்று ஆண்டு பட்டப்படிப்பு முற்றிலும் இலவசமாக வழங்க இருக்கின்றன .நமது தமிழ்நாட்டில் இருக்கும் கலை அறிவியல் கல்லூரிகள். தங்கள் கல்லூரி கட்டணத்துக்காக மட்டும் திருக்குறளை கற்காமல், திருக்குறளின் பொருளை உணர்ந்து வாழ்ந்தால், உலகின் சிறந்த மனிதனாக, ஒழுக்கம் நிறைந்த மனிதனாக, உயர்ந்த மனிதராக மாணாக்கர்களால் உருவாக முடியும். மாணாக்கர்கள்தான் நாட்டின் எதிர்கால நம்பிக்கை.

வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி கரூர் தொடர்பு  எண்                                      9944450507

திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி மதுரை தொடர்பு எண்                          9443046432

எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம் தொடர்பு  எண்                                                                                                                                9789354894, 9994171074