நோக்கம்

1330 திருக்குறளையும் கல்வெட்டில் பதித்து “திருக்குறள் மலை” உருவாக்கப்பட வேண்டும்.

காகிதத்தில், புத்தகத்தில், கணினியில், சிடியில், Hard disk க்கில் இதுபோன்ற நிலைகளில் இருக்கும் திருக்குறளை, மலையிலே கல்வெட்டிலே பதிப்பதால், திருக்குறள் உலக மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த பூமி உள்ளவரை திருக்குறள் மலைமேல் கல்வெட்டாகப் பதிந்து இருக்கும். இதனால் உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உலக நூல் அங்கீகாரம் தர யுனெஸ்கோ முன்வர வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடுகளாக இருக்கும் அனைத்து நாடுகளும், திருக்குறளை தங்கள் நாட்டு மொழியில் மொழி பெயர்த்து, அந்தந்த நாட்டு மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில், அந்தந்த நாட்டுக் கல்வித் திட்டங்களில் சேர்க்க முன்வர வேண்டும்.