முயற்சி திருவினையாக்கும்
பாரதத் திருநாட்டின் திருப்புகழை நிலை நிறுத்தும் வண்ணம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகெங்கும் பயணம் செய்து நாட்டின் உயர்வை உலக மக்களுக்கு உணர்த்தி வருகிறார். அந்த வகையில் திருவள்ளுவரின் சிந்தனைகளை, திருக்குறளை, ஐநா சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 196 நாடுகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற நமது கோரிக்கைகளை, முதன் முதலாக சிங்கப்பூரில் அமைய இருக்கும் திருவள்ளுவர் கலாச்சார மையம் மூலமாகவும், தற்போது அமெரிக்க வாழ் மக்களிடையே உரையாற்றும் போதும், பாரதப் பிரதமர் தொடங்கியுள்ளார். நமது பாரதப் பிரதமரின் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், உலக மக்களுக்கான அன்பையும் அமைதியையும் போதிக்கும் வண்ணம் திருக்குறள் உலகமெல்லாம் கல்வி நூலாக பயணிக்கும் வண்ணம் நமது திருக்குறள் அமைந்திருப்பதும், அதை நமது நாட்டின் பிரதமரே முன் நின்று எடுத்துச் செல்வதும், பாராட்டத்தக்கது போற்றத்தக்கது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். குறள் 664