சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும்., Thiruvalluvar Cultural Centre will be set up in Singapore

இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அத்துடன், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமரிடம் மோடி உறுதி அளித்தார். இந்தியாவின் கலாசாரத்தை வெளிப்படுத்த, யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள் பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக கலாசார மையம் அமைய உள்ளது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் உரை

இந்தியாவின் முதல் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் சிங்கப்பூரில் விரைவில் திறக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகப் பழமையான மொழியான தமிழில் உலகிற்கு வழிகாட்டும் சிந்தனைகளை வழங்கிய மகான் திருவள்ளுவர். அவரது படைப்பு, திருக்குறள், கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது, அதன் கருத்துக்கள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

இதன் பொருள்: “நியாய உணர்வு மற்றும் பிறருக்கு சேவை செய்யும் நபர்களை உலகம் போற்றுகிறது.”

சிங்கப்பூரில் வசிக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களும் இந்தச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த பங்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

I am delighted to inform you that India’s first Thiruvalluvar Cultural Centre will soon be inaugurated in Singapore. The great saint Thiruvalluvar provided guiding thoughts to the world in the most ancient language Tamil. His work, the Thirukkural, was composed nearly 2,000 years ago, yet its ideas remain relevant today.

Nayanodu Nanri Purind Payanudaiyar

Panbu Paratattum Ulagu.

This means: “The world admires those who are known for their sense of justice and service to others.”

I am confident that millions of Indians living in Singapore are also inspired by these ideas and are contributing to strengthening the relations between the two countries.