நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும்.,திருக்குறள் சிந்தனைகள் மாணாக்கர்கள் மத்தியில் மேலோங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, குறள் மலைச் சங்கம் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் திருக்குறள் போட்டிகள் நடத்தி மாணாக்கர்களை ஊக்குவித்து வருகிறது, அந்த வகையில் கோயம்புத்தூர் பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), சந்திரகாந்தம் தமிழ்மன்றம், P.S.G.R மற்றும் குறள் மலை சங்கம் இணைந்து நடத்திய மாணவியர்களுக்கிடையேயான ‘திருக்குறளோடு விளையாடு’ எனும் திருக்குறளோடு கண்டும் கேட்டும் விளையாடும் விளையாட்டுப் போட்டியை 11/03/2024 அன்று நடத்தியது. 28 மாணவியர்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில். சென்ற மாதம் நடைபெற்ற திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை, வழங்கப்பட்டது.
Our culture must be preserved. With the aim of making Thirukkural ideas prevail among the students, the Kural Hill Association has been encouraging the students by conducting Thirukkural competitions in various colleges and schools. in that respect, P.S.G.R Krishnammmal College, Coimbatore, Tamil Department (Self-Finance Division), Chandrakantham Tamil Manram, and Kural Malai Sangam jointly organized a Thirukkural competition for the students “Thirukkuralodu Vilaiyadu” on 11/03/2024. 28 students participated. In that event. Prize money, Thirukkural book and certificate for the winners of Thirukkural writing competition held last month was provided.