நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில், 2.11.2023 அன்று குறள் மலைச் சங்கத்தின் சார்பாக திருக்குறள் கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் லயோலா கல்லூரியின் பேராசிரியர் முனைவர் லதா அவர்கள். இக்கருத்தரங்கில் திருக்குறள் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவிக்கு ரூபாய் ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
இது மாதந்தோறும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை. இதுபோல் நாம் MoU போட்டுள்ள கல்லூரிகளில் இந்த மாதாந்திர போட்டிகள் நடத்தப்பட்டு, மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இக்கருத்தரங்கை தலைமையேற்று நடத்திக் கொடுத்த கல்லூரியின் முதல்வர் முனைவர் பேபி சகிலா அவர்களுக்கு நன்றி., முன்னிலை வகித்த துறை தலைவர் முனைவர் கவிதா அவர்களுக்கும் நன்றி.