பிரான்ஸ் நாட்டில் திருக்குறளும் திருவள்ளுவரும்

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் புகழை போற்றும் வகையில் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமரின் வருகையினை ஒட்டி பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் தமிழ் மொழி மிக பழமையான மொழி என குறிப்பிட்டு,
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” – எனும் திருக்குறளை குறிப்பிட்டு, இந்திய பொருளாதார உயர்வுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கும் முக்கியம் என குறிப்பிட்டு பேசினார். மேலும் பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி அந்த விழாவில் குறிப்பிட்டார்.