வள்ளுவர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வள்ளுவர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ( MOU ) நாள் : 04.08.2022

1. உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளை, மலையில், கல்வெட்டில் பதித்து திருக்குறள் மாமலை உருவாக்குவது.

2. உலகத்துக்கு, முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும்.

3. திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 196 நாடுகளிலும் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க ஆவன செய்ய வேண்டும்., ஐக்கிய நாடுகள் சபை சட்டத்திருத்தத்தில், திருக்குறளின் முக்கிய கருத்துக்கள் இடம் பெறச் செய்யும் நிலை உருவாக்குவது, போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நோக்கங்களுடன்,

உலகத்துக்கே கல்வி நூலாகத் திகழும் திருக்குறளை மாணாக்கர்களிடம் சென்று கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கத்தோடு பயணிக்கும் சென்னை குறள் மலைச் சங்கம், கரூர் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியோடு இணைந்து, இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் பயனாக இந்த கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களும், இனிவரும் காலங்களில் பயிலும் மாணாக்கர்களும், பேராசிரியர்களும், குறள் மலைச் சங்கம் நடத்தும் அனைத்து கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் அனைத்திலும் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெறுவதோடு, குறள் மலைச் சங்கம் வெளிநாடுகளில் நடத்தும் மாநாடுகளிலும் பங்கேற்கும் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

முக்கியமாக குறள் மலைச் சங்கத்தின் உறுப்பினராகும் வாய்ப்பையும் இந்த கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் பெறுவார்கள். வள்ளுவர் கல்லூரியில் குறள் மலைச் சங்கத்தின் மூலம் நடத்தப்படும் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றை தலைமை ஏற்று நடத்துவதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொழியியல் வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுவார்கள். இதன் மூலம் மானக்கர்களின் நேர்மையான வாழ்க்கைத் திறன் மேம்படுவதோடு, இனிவரும் சமுதாய வளர்ச்சிக்கும் நேர்மையான சிந்தனை கொண்ட அற்புதமான மனிதர்கள் உருவாவதற்கும் வாய்ப்பு இந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்படும் என்று வள்ளுவர் கல்விக் குழுமத் தாளாளர் திரு செங்குட்டுவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.