திருக்குறளை உலகெங்கும் கொண்டு செல்லும் உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட, நமது குறள் மலைச் சங்கத்துடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் இந்தக் கல்லூரி மாணாக்கர்களும் பேராசிரியர்களும், தொடர்ந்து நம்முடன் இணைந்து பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். “திருக்குறள் மாமலை” உருவாக்குவது, திருக்குறள் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக அங்கீகாரம் பெறுவது, ஐநா சபையின் உறுப்பு நாடுகளான 196 நாடுகளிலும் திருக்குறளை பாடத்திட்டத்தை சேர்ப்பது போன்ற அரிய பணிகளில், இந்தக் கல்லூரி இணைந்து பயணிக்கும் வாய்ப்பைப் பெறுகிறது.
நன்றி : தாளாளர் கவாலியர் எம் எஸ் மதிவாணன்,
இயக்குனர், கல்லூரி முதல்வர்,
தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மஞ்சுளா ,
பேராசிரியர் முனைவர் சங்கர ராம பாரதி