ஆஸ்திரேலிய (Australia) நாட்டில் சிட்னி நகரில் திருக்குறள் வகுப்பு ….

ஆஸ்திரேலியாவின் அதிசயங்கள்
சிட்னி மாநகரில் பாலர் தமிழ்ப்பள்ளி
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட இந்தப் பள்ளி நகரின் பல பகுதிகளிலும் வெகு சிறப்பாக செயல்படுகிறது. ஆஸ்திரேலியா நாட்டில் தமிழை ஒரு பாடத்திட்டமாக அங்கீகரித்து இருக்கிறார்கள். தமிழில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உயர் கல்வித் துறையில் கட் ஆப் என்று சொல்லப்படும் மதிப்பெண்கள் கொடுத்து இடம் அளிக்கிறார்கள். இந்த பாலர் தமிழ் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது. படத்தில் நாம் இருப்பது ஏழாம் வகுப்பு மாணவர்களுடன். ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் தமிழ் மாணாக்கர்களுக்கு வகுப்பு, தமிழ் வகுப்பு, நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இந்தப் பள்ளிகளின் மேனாள் தலைவர் திரு. முருகானந்தம் அவர்களுக்கு நன்றி. இங்குள்ள மாணவர்கள் அனைவரும் தமிழிலேயே பேசுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழிலேயே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இவர்கள் மிகவும் தமிழ் ஆர்வம் மிகுந்த மாணவர்களாக திகழ்கிறார்கள்.
மாணாக்கர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்