நான்காவது ஆண்டில்”திருக்குறள் மாமலை” மாத இதழ் ஏப்ரல் 2022

மாண்பமை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்ட “திருக்குறள் மாமலை” தமிழ் வளர்ச்சி சார்ந்த மாத இதழ், நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதழ் தொடர்ந்து வெளிவர காரணமாக இருக்கும், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், மாண்புமிகு பாரதப் பிரதமர் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இங்கிலாந்து பிரான்ஸ் டென்மார்க் ஆஸ்திரேலியா அமெரிக்கா கனடா சிங்கப்பூர் மொரிஷியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இதழ் சென்றடையக் காரணமாக இருக்கும் வெளிநாடு வாழ் தமிழ் அறிஞர்களுக்கும், வெளிநாட்டு தமிழ் சங்கங்களுக்கும் நன்றி.