உலகத் திருக்குறள் மாநாடு 2022 ஜனவரி கோவையில்

திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்களை இணைத்துக்கொண்டு, கடும் முயற்சி எடுத்து வருகிறோம் நாம்.

அதில் மிகவும் முக்கியமானவர் மொரீசியஸ் நாட்டின் மேனாள் கல்வி அமைச்சரும் உலகவங்கியின் மேனாள் உறுப்பினரும் யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனருமான பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள். அவரது மேலான ஆலோசனைகளின்படி திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து திருக்குறள் மாநாடுகள் நடத்தப்பட்டு, ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் முனைவர் ஜான் சாமுவேல் அவர்கள் தலைமையிலும், ஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தில் முனைவர் சந்திரிகா அவர்கள் தலைமையிலும், மேலும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்திலும், இந்திரா காந்தி பல்கலைக்கழகம் மொரீசியசில் இன்னும் பல்வேறு நாடுகளிலும் இதற்கான தொடர் மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றின் ஒரு முக்கிய பகுதியாக 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஈரோட்டில் பெரிய அளவில் உலகத் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது. 15 நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த மாநாட்டில் கல்வெட்டில் திருக்குறள் என்ற நூல் வெளியிடப்பட்டு, யுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நூலை வெளியிட்டவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினராக இருந்த பேராசிரியர் E. பாலகுருசாமி அவர்கள். இதைப் பெற்றுக்கொண்டவர் யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள்.

இங்கிலாந்து நாட்டின் சார்பாக சிவா பிள்ளை அவர்கள், அமெரிக்காவின் சார்பாக முனைவர் ஆல்பர்ட், கனடாவின் சார்பாக பேராசிரியர் பாலசுந்தரம் பேராசிரியர் செல்வம் ஸ்ரீ தாஸ் கவிஞர் ஜோதி ஜெயக்குமார், பிரான்ஸ் நாட்டிலிருந்து டாக்டர் பெஞ்சமின், ஜெர்மனியிலிருந்து கவிஞர் நகுலா சிவநாதன், இலங்கையிலிருந்து மேகநாதன், சிங்கப்பூரிலிருந்து முனைவர் ராஜ்கண்ணு, மியான்மரில் இருந்து கலைச்செல்வன் கருணாநிதி, கலைச்செல்வன் சந்திரசேகரன் உட்பட இன்னும் பல்வேறு நாடுகளில் இருந்தும் மொழியியல் அறிஞர்களும் கலந்து கொண்டு இந்த மாநாட்டை சிறப்பித்தார்கள்.

இந்த மாநாட்டில் அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் E.பாலகுருசாமி, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்  காளிராஜ், பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கொளந்தைசாமி, மேனாள் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்  சி.சுப்பிரமணியம் உள்பட பல பல்கலைக்கழகத் துணை வேந்தர்களும், 11 கல்லூரித் தாளாளர்களும், ஐந்து கல்லூரி முதல்வர்களும், 25க்கும் மேற்பட்ட தமிழ்த் துறைத் தலைவர்களும், பேராசிரியர்களு,ம் சுமார் 2000 மாணவச் செல்வங்களும் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தார்கள்.

இந்த மாநாட்டில் திருக்குறள் கல்வெட்டில் அமைக்கப்பட வேண்டும்., கல்வெட்டில் பதிக்கப்பட்ட திருக்குறளை ஆவணமாக யுனெஸ்கோவின் சமர்ப்பித்து, திருக்குறள் உலக நூல் என்னும் அங்கீகாரம் பெற வேண்டும்., உலக நூல் அங்கீகாரம் பெறும் திருக்குறளை, அனைத்து நாடுகளும் தங்கள் கல்வி நூல்களில் இடம் பெறச் செய்ய வேண்டும்., ஐக்கிய நாடுகளின் சட்ட திருத்தத்தில் திருக்குறளின் முக்கியக் கருத்துகள் இடம் பெறச் செய்ய வேண்டும் போன்ற மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு யுனெஸ்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 தொடர்ந்து நமது திருக்குறள் பணிகளை கூர்மையாக கவனித்து வந்த மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலே, திருக்குறள் மலையை உருவாக்க அனைத்து ஏற்பாடுகளும் நாங்கள் செய்து தருவோம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதன்படி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், கோயமுத்தூரில் விரைவில் பாரதப் பிரதமர் அவர்கள் தலைமையில், உலகத் திருக்குறள் மாநாடு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம்.

 அந்த மாநாட்டில் திருக்குறளை கல்வெட்டில் அமைப்பது மற்றும் திருக்குறளை யுனெஸ்கோ எடுத்துச் செல்வது போன்ற தீர்மானங்கள் மேடையில் நிறைவேற்றப்பட்டு, மாநாட்டுக்கு வருகை தரும் யுனெஸ்கோ இயக்குனரிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட இருக்கிறது.

தொடரும் இந்த திருக்குறள் பயணம் ஐக்கிய நாடுகள் சபையைச் சென்றடைந்து, அங்கு சட்டத் திருத்தம் மேற்கொள்ளும் அந்த நாளில், நமது திருக்குறளின் முக்கிய கருத்துக்கள் அதில் இடம்பெற செய்வதே நமது இலக்கு.

தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் இந்த திருக்குறள் மாநாட்டில் மிகச் சிறப்பான திருக்குறள் ஆய்வு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. உலகெங்கிலும் இருந்து மொழியியல் வல்லுனர்களு,ம் கட்டுரையாளர்களும், கட்டுரை கொடுக்கிறார்கள்.

அதேபோல் இந்தியாவில் இருப்பவர்களும், தமிழ்நாட்டில் இருப்பவர்களும், கல்வியாளர்களும், மாணாக்கர்களும் பெருவாரியான கட்டுரைகள் கொடுத்து, யுனஸ்கோவுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் செல்ல இருக்கும் இந்த திருக்குறள் ஆய்வு நூலுக்கு சிறப்பு சேர்க்க வேண்டுகிறோம்

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த திருக்குறள்  பயணத்தில், கல்வியாளர்கள், அரசியல் அறிஞர்கள், பேராசிரியப் பெருமக்கள், மாணாக்கர்கள், செல்வந்தர்கள் என அனைவருமே பங்கேற்று தத்தம் நிலைகளுக்கு ஏற்ப ஆதரவளித்தும், உடன் பயணித்தும், சிறப்பு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

We are working hard to bring together linguists from different countries in order for Thirukkural as world book recognized by UNESCO. The most important of us is Prof. Arumugam Parasuraman, Minister of Education of Mauritius, Former Member of the World Bank and Former Director of UNESCO. Following his advice, Thirukkural conferences have been held in various countries, research papers have been published, and resolutions have been passed in order to Thirukkural as world book recognized by UNESCO

Dr. John Samuel at the University of Liverpool in the United Kingdom, Dr. Chandrika at the University of Sydney in Australia, and the University of Singapore, Indira Gandhi University in Mauritius and various other countries are holding a series of Thirukkural conferences. An important part of this was the large-scale global Thirukkural conference held in January 2020 in Erode. Language Linguists from 15 countries attended and featured. At this conference, a book titled Kalvettil Thirukkural was published by us and sent to UNESCO. The book was released by Professor E. Balagurusamy, Former Vice Chancellor of Anna University and a member of the Union Public Service Commission. The recipient is Prof. Arumugam Parasuraman, Former Director of UNESCO.

Siva Pillai on behalf of the United Kingdom, Dr. Albert on behalf of the United States, Prof. Balasundaram on behalf of Canada, Prof. Selvam Sri Das, Poet Jyoti Jayakumar, Dr. Benjamin on behalf of France, Poet Nakula Sivanathan on behalf of Germany, Dr. Rajkannu on behalf of Singapore, Dr.Arunachalam from Sri Lanka and Linguists from various countries, including Karunanithi and Kalaichchelvan Chandrasekaran Myanmmar, also graced the conference.

The conference was attended by Anna University Vice Chancellor Prof. E. Balakurusamy, Bharathiyar University Vice Chancellor Prof. Kaliraj, Periyar University Vice Chancellor Prof. Kolanthaisamy, Menal Tamil University Vice Chancellor Prof. C. Subramaniam, 11 University Vice Chancellors, five College Principals and more than 25 Tamil students. Department heads, professors, and about 2,000 student dignitaries graced the conference. The conference should be set up in the form of a Thirukkural. The most important resolutions to be made were passed and sent to UNESCO.

In IndiaThe ruling BJP government, in the center of continuing to closely monitor our work in Thirukural, had stated in its Tamil Nadu Assembly election manifesto that “we would make all arrangements to build Thirukural hill”. Accordingly, in fulfillment of the promise made in the election manifesto, we are planning to hold a world conference in Coimbatore soon under the chairmanship of the Prime Minister of India. Resolutions such as the inscription of the Thirukkural and the carrying of the Thirukkural to UNESCO are to be passed on the platform and handed over directly to the UNESCO Director who will attend the conference.

Our goal is to reach out to the United Nations on the day of the legislation and to include the key points of our thread. The best Thirukkural research books are to be published at this Thirukkural conference which will add pride to the nation. Linguists and columnists from all over the world give articles and participate. As well as those in India, those in Tamil Nadu, academics, and students who have contributed a lot of articles, we would like to add a special to this thread to go to UNESCO and the United Nations.

We cordially request all academics, politicians, professors, students, and the rich to take part in this historic journey, to support, travel with, and add specialties.