கல்வியாளர்களின் கைகளில் ”திருக்குறள்”

கல்வியாளர்களின் கைகளில் ”திருக்குறள்”
நாம் கடந்த 20 ஆண்டுகளாக எடுத்து வந்த தொடர் முயற்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் திருக்குறளை மலையிலே கல்வெட்டில் பதித்து, குறள்மலைப் பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய அரசு, ஆளும் பாஜக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருப்பது, நமக்கெல்லாம் பெரும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஈரோட்டில் உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்தி, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கலால் “திருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெறவேண்டும்” எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் வசம் அதை ஒப்படைத்து, தற்போது பரிசீலனையில் இருந்து வரும் செய்திகள், மத்திய அரசை சென்றடைந்தவுடன், ஆக்கப்பூர்வமாக நமக்கு ஆதரவு அளித்து உள்ளார்கள். திருக்குறளைக் கல்வெட்டில் பதித்து திருக்குறள் மாமலைப் பூங்கா அமைய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்கள். 
இதை சிரமேற்கொண்டு சிந்தனையில் ஏற்றி, தமிழர்களின் அழியாச் சொத்தாக, காலங்களைக் கடந்து நிற்கும் இந்த திருக்குறள் மலையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
தமிழ் வேறு திருக்குறள் வேறு அல்ல. மொத்தத்தில் நமது தமிழ் மொழி, திருக்குறள் வடிவத்தில், கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரிகள் கைகளிலிருந்து, கல்வியாளர்கள் கைகளுக்கு (UNESCO) சென்று கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதற்காக பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு நமது நன்றிகளை காணிக்கை ஆக்குவோம்.