திருக்குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழா., இயக்குநர் கோ. விசயராகவன் சிறப்புரை Director Visayaragavan.

அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் இருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் பங்கேற்றுச் சிறப்பித்த,  திருக்குறள் மலைச் சங்கத்தின் 22 ம் ஆண்டு விழா, திருக்குறள் மாமலை மத இதழின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் வள்ளுவத்தில் மருத்துவம் கருத்தரங்க விழா…முப்பெரும் விழா.

திருக்குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழா 15.02.2021 அன்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

15.02,2021 திருக்குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களின் சிறப்புரை Director Visayaragavan 15.02.2021 உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற, குறள் மலைச் சங்கத்தின் முப்பெரும் விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் டாக்டர் விஜயராகவன், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் விஜி சந்தோசம், அமெரிக்கா ஹாவார்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன், குமரிக் கண்டத்தின் வரலாற்று ஆராய்ச்சியாளர் டாக்டர் பத்மநாபன், சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் டாக்டர் சந்திரசேகரன் டாக்டர் சுலோச்சனா, டாக்டர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். விழாவில் கலந்து கொண்ட சான்றோர் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஆஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் அன்பு ஜெயா, டாக்டர் முருகானந்தம், கனடாவிலிருந்து டாக்டர் பாலசுந்தரம், புலவர் ஜோதி ஜெயக்குமார், சிங்கப்பூரிலிருந்து டாக்டர் ராஜ்கண்ணு, ஆகியோரது “வள்ளுவத்தில் மருத்துவம்” கருத்தரங்கம் பற்றிய காணொளியும் விழாவில் ஒளிபரப்பப்பட்டது. காணொளி அனுப்பி கொடுத்த அயல்நாட்டு சான்றோர் பெருமக்களுக்கும் திருக்குறள் மலைச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.