திருக்குறள் ஆண்டு 2020

2020 ஆண்டு ஒரு தலைசிறந்த ஆண்டு. மக்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், 2020 ஜனவரி 3 4 5 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய திருக்குறள் மாநாட்டில், திருக்குறள் ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டு, “திருக்குறள் உலக நூல் அங்கீகாரத்திற்காக”, யுனஸ்கோ நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மதிப்புமிகு பல்கலைக்கழக துணைவேந்தர்களால் வெளியிடப்பட்டு, யுனெஸ்கோ மேனாள் இயக்குனர் உயர்திரு ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழின் பெருமையை திருக்குறளின் பெருமையை யுனஸ்கோ வரை எடுத்துச் சென்று இருக்கும் இந்த ஆண்டு, குறிப்பாக திருக்குறளை உலக நூல் அங்கீகாரம் பெறுவதற்காக அனுப்பப்பட்டு இருக்கும் இந்த ஆண்டு, நம் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு ஆண்டாகவே நாம் பார்க்கிறோம். “திருக்குறள் உலக நூல் அங்கீகாரம்” பெற்று விட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக இருக்கும் அனைத்து நாடுகளின் கல்வி நூல்களிலும், திருக்குறள் பாடமாக வைக்கப்படும். அப்போது திருக்குறளின் அருமை பெருமைகளை உலக மக்கள் அனைவரும் உணரக்கூடிய சந்தர்ப்பம் வரும். உலக மக்கள் அனைவரும் திருக்குறளை கற்று வாழ முற்படும்போது, மானுட சமுதாயத்தை அச்சத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும் தீவிரவாதம் மறுக்கப்பட்டு, அன்பும் அமைதியும் உலகில் நிலைபெறும்.
ஆகவே 2020 வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய ஆண்டு.
நன்றி 2020
Thanks to 2020
www.thirukkuralmalai.org