“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா

“திருக்குறள் மாமலை” மாத இதழ் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன்
அவர்களால் 19.5.2019 அன்று காலை 10 மணி அளவில் வெளியிடப்பட்டது.
தமிழ் செய்திகளையும், தமிழ் வளர்ச்சி செய்திகளையும், உலகத்தமிழர்களின்
செய்திகளையும் தாங்கிவரும் ஒப்பற்ற ஒரு மாத இதழாக இந்த இதழ் வெளிவரும் என்பதை
தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த இதழின் சிறப்பு நான்கு வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் தொடர் கட்டுரை
எழுதுகிறார்கள்.
சுமார் நூறு இதழ்கள் விதம் பத்து நாடுகளுக்கு இந்த இதழ் அனுப்பப்பட
இருக்கிறது. PDF வடிவத்திலும் “திருக்குறள் மாமலை” உங்களுக்கு கிடைக்கும்.
இவ்விழாவில் சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவர் திரு எஸ்
பாலசுப்பிரமணியன் திருப்பூர் கே பி கே நிறுவனங்களின் தலைவர் திரு கே பி கே
செல்வராஜ் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதியின் தலைமை குருக்கள் ஸ்ரீ நடராஜ
சாஸ்திரிகள் கும்பகோணம் ராயாஸ் நிறுவனங்களின் தலைவர் திரு கோவிந்தராஜன்
திருக்குறள் ஆர்வலர் திரு புண்ணியமூர்த்தி திரு ராம வேல்முருகன் சிட்டி
யூனியன் வங்கி பொது மேலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை
சிறப்பித்தனர்.
இம்மாத இதழ் வெளியீடு காண பெரும் உதவி புரிந்த கவிஞர் பாலு கோவிந்தராஜன்
அவர்களுக்கு நன்றி.