5 வது பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம்

எமது எஸ்.எஸ்.எம் தமிழ் மரபு மையம் , உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம்,அமெரிக்காவில் இயங்கி வரும் வேதா மையம்,வி,ஐ.டி வேந்தர்   அவர்களின் தமிழியக்கம்,டாக்டர் அப்துல்கலாம் நினைவு தமிழ் பண்பாட்டு மையம்,குறள் மலைச்சங்கம்,பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகாரம் பெற்ற வல்லமை மின்னிதழ்ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் 5 வது பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம்வரும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ம் தேதி குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக நடைபெற உள்ளது .

தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மிகச் சிறந்த முறையில் நமது பன்னாட்டு
கருத்தரங்கினையும் அனைத்திற்கும் மகுடம் வைத்ததுபோன்று கடந்த மார்ச் மாதம் 1,2 ஆகிய தேதிகளில் உலகின் மிகச் சிறந்த அறிஞர்கள்,தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் உள்ளிட்ட தமிழக ,இலங்கை அமைச்சர் பெருமக்கள், மொரிசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர், ஆகிய பல முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்ட முதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு நடத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே …

இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் நடைபெறும் ” தமிழர்தம் மெய்யியலும்
வாழ்வியலும் ” என்ற பொருளில் நடைபெற உள்ள பன்னாட்டு தமிழ் ஆய்வுக்
கருத்தரங்கிற்கு ஆய்வுக் கட்டுரைகள்  வரவேற்கப் படுகின்றன.

ஆய்வுக் கட்டுரைகள் வரும் 2019 ஜனவரி 25 ஆம் தேதிக்குள் வந்து சேர
வேண்டுகிறோம்

கட்டுரைகள் 5 பக்கங்களுக்கு மிகாமல் பாமினி அல்லது யுனிகோட் எழுத்துருவில்
இருப்பது நலம். வேறு எழுத்துருவில் அமைந்தால் அந்த எழுத்துருவையும் சேர்த்து
அனுப்புவது நலம் ..

ஆய்வுக் கட்டண விபரம்

பேராசியர்களுக்கு – ரூபாய் 800
ஆய்வு மாணவர்கள்,தமிழ் ஆர்வலர்கள்,முகநூல்,புலன, இணைய நண்பர்கள் அனைவர்க்கும் – ரூபாய் 700
வெளிநாட்டு ஆய்வாளர்கள் – 50 டாலர் ( கட்டுரைக்கு மட்டும் )
கட்டுரை வழங்காமல் பங்கேற்க விரும்புபவர்கள் – ரூபாய் 150

ஆய்வுக்கட்டுரை அனுப்பிவிட்டு வர இயலாதவர்கள் கட்டணத்துடன் ரூபாய் 150(தபால் செலவிற்காக) அனுப்பி வைக்கவும்

கட்டணம் செலுத்த வேண்டிய விபரம்

கட்டணத்தை குமாரபாளையத்தில் மாற்றத்தக்க வகையில் ” SSM TAMIL MARAPU
ARAKKATTALAI” என்ற பெயரில் வரைவோலை எடுத்து அனுப்பலாம்

அல்லது

CORPORATION BANK,SSM TAMIL MARAPU ARAKKATTALAI, 52010157639651, IFSC CODE –
CORP0000876  என்ற வங்கிக் கணக்கில் செலுத்தலாம்

கருத்தரங்க நாள் அன்று ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுதிகள் ISSN எண்ணுடன்
வெளியிடப்படும்

தமிழ் கூறும் நல்லுலகில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி
தெரிவித்து மீண்டும் உற்சாகமோடு அழைக்கிறோம்

தொடர்ந்து தமிழ்ப் பணி செய்ய எங்களை ஊக்கப்படுத்தும் எமது கல்லூரித் தலைவர் கவாலியர் முனைவர் Mathi Cavalier அவர்களுக்கும் , கல்லூரி இயக்குநர் முனைவர் ராமசாமி, முதல்வர் முனைவர்.Kamaraj K , தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மஞ்சுளா,சக பேராசிரிய பெருமக்கள், அனைத்து துறைத் தலைவர்கள் , அலுவலக நண்பர்கள், மாணவ மாணவிகள், இணைந்து நடத்த உள்ளஅமைப்புகள்  உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்

தமிழுக்காக இணைத்துள்ளேன்

நண்பர்கள் பகிரலாம்

நன்றி

முனைவர். நா.சங்கர ராமன்
பன்னாட்டு தமிழ் ஆய்வுக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்
அலைபேசி  — 9994171074,7010221913