04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு

கல்வெட்டில் திருக்குறள் பாகம் 4 என்ற இந்த ஆய்வு நூல் சென்னை லயொலா கல்லூரியில் 04.10.2017 இன்று, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் வெளியிட,  மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், முனைவர் விசயராகவன் அவர்கள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை, சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் இயக்குநர் ரூட்ஸ் நிறுவனங்கள் கோவை, திரு.ஜி.சுந்தரராஜன் அவர்கள் தலைவர் உலகத் திருக்குறள் பேரவை தலைவர் திண்டுக்கல், முனைவர் வி.முத்து அவர்கள் புதுச்சேரி தமிழ்ச் சங்கம் புதுவை ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.

மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் பேசும்போது, கி.மூ.300 ஆண்டுகளுக்கு முற்பட்டது நமது தமிழ் என்பது கீழடி ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது என்றார். இதுவே உலகின் முதல் மொழியாகவும் மூத்த மொழியாகவும் இருந்திருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட மொழியான தமிழில் இருக்கக்கூடிய நமது திருக்குறளை கல்வெட்டிலே உருவாக்குவது சாலச்சிறந்த பணி என்று பாராட்டிப் பேசினார், மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் பேசும்போது, சீவக சிந்தாமணியை மேற்கோள் காட்டி, திருக்குறளை கல்வெட்டில் பதிக்கவேண்டியதன் அவசியத்தை அவசியத்தை எடுத்துரைத்தார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் விசயராகவன் அவர்கள் பேசும்போது, இந்த குறள் மலைச் சங்கத்தின் செயல்கள் பிரமிக்கத்தக்கவை. ஒரு மலை முழுவதும் திருக்குறளை கல்லிலே பதித்து வைத்தல் என்பது காலத்தால் அழியாத ஒரு வரலாற்றுப் பணி. இந்த மலை ஈரோடு மாவட்டத்தில் அமைய உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். ஆகவே குறள்மலை ஒருவாகும் காலம் நெருங்கிகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.